30

பதினைந்தாவது

சுச்சோதிதீர்த்தயாத்திரைச்சருக்கம்

1193 படர்செழுந்தகட்டுப்பையவிழ்துத்திப்பாந்தளின்றலையின்மேற்படுத்த

வுடைதிரைக்கடற்சீருலகினில்மேலாயுரைதருமித்தலப்பெருமை

தடைபடாதருளிற்சார்ந்திடுமின்பச்சவுனகமுனிவகேளென்னா

முடிவிலானந்தவாரிதிமூழ்குமுதிர்தவச்சூதன்பின்மொழிவான்

1194 திரைபுரள்கோதாவிரிதருதீரஞ்சேர்ந்திடும்பலவளனார்ந்த

பொருவருபோகவதியெனவோங்கும்பொற்சுவருடுத்தநற்புரியி

னரசர்கணெருங்கியறுதினந்தத்தமருந்திறையளந்துவீழ்ந்திறைஞ்சப்

பரவருமகுடமணியொளிபரப்பும் பரிபுரமருவியபதத்தான்

1195 அருமறையாளர்க்கருச்சனையன்பினாற்றியேயறங்கள்கைக்கொண்டோன்

பெருகுநற்றீர்த்தத்துறைதொறுந்தோய்ந்துபெருங்குலப்பிதிர்கடன்றீர்த்தோ

னிருநிதியதனையிரவலர்க்காற்றியிரப்பெனுமிருள்வலிதுறந்தோன்

கருதரிதாயகலைபலதெரிந்துகடக்கருங்கலைக்கடல்கடந்தோன்

1196 காமனிற்சிறந்தகட்டழகுடையோன்காமமாதியகளைகட்டோன்

றாமநீள்புயஞ்சேர்தரையுயிர்க்கெல்லாந்தாயினினூங்குதண்ணளியோன்

சேமமாகியசெஞ்சுடர்வடிவேலாற்றெவ்வலியடக்கியதிறலோ

னேமியந்தடக்கைநீனிறச்செங்கணீண்டமாலெனவருள்பூண்டோன்

1197 செப்புமாயிரநற்றிருந்துமந்திரத்தாற்சிரித்துமுப்புரந்தனையெரித்த

முப்பரம்பொருளாமுக்கணெம்பிரானைமுப்பொழுதருச்சனைமுயல்வோன்

பைப்பெரும்பாந்தட்பமூறலைசுமந்தபடியெலாங்கண்ணிமைபோல

வொப்பருமதியமுறழ்கவிகைக்கீழோங்குசெங்கோனடாத்துரவோன்

1198 மதிவளர்ந்தொடுங்கிவந்திடுநாளின்மன்னியவட்டமிதன்னிற்

றுதிதருமர்த்தோதயமகோதயத்திற்சொல்விதிபாதநன்னாளி

னுதயநாடனிலோராயிரமோரொன்றுளங்களிதூங்கவெஞ்ஞான்றுந்

திதமுறுதானவிதமிகவளிக்குந்தேவவன்மாவெனும்பெயரோன்

1199 அன்னதொல்புகழ்சேர்மன்னர்மன்னவனுக்கழிதலின்முழுதுலகேத்த

மன்னுசுச்சோதிமாநீதிமுகனல்வதானியன்றேவமித்திரச

னென்னுநன்மைந்தரீரிருவோருமிகலறுமகரமேலுயர்த்த

கன்னலஞ்சிலையிற்காமனேயென்னக்கண்ணகன்புவியினண்ணினரால்

1200 சாலவுங்கற்றோர்தங்கள்பாற்கலைகடாந்தெரிந்திருமுதுகுரவர்

சீலநற்குரவன்செப்பியமாற்றந்தினந்தொறுந்திறம்பிடாத்திறத்தோர்

ஞாலமேற்றிகிரிபுருட்டிநன்களிப்பாரைபதியெனவளர்ந்ததற்பின்

மாலுமெய்த்திருவும்போலவர்க்கின்பமணம்புணர்வித்தனன்மன்னன்

1201 மன்னவனந்தமைந்தர்நால்வருக்குமணம்புணர்வித்தபின்மரபான்

முன்னவன்றனக்குமுழுதுலகளிப்பான்மொய்த்திடுமணிமுடிகவித்துப்

பன்னுமந்திரிகடம்மைநம்புதல்வர்ப்பாதுகாத்திடுமெனப்பணிந்துத்

தன்னுடைமடவாடன்னொடும்பொதும்பர்தான்றிகழ்வனத்திடைச்சார்ந்தான்

1202 சார்ந்துபூதங்கடகுபொறிதணந்துதடுப்பரும்வளியையுந்தடுத்து

நேர்ந்தமெய்ஞ்ஞானநிட்டையிற்கூடிநேயமோடுற்றுடனீத்தான்

சேர்ந்திடுந்தருமசீலையுங்கணவன்செல்வழிக்கொடுசெலத்திருநன்

கார்ந்திடுமுன்னோனனுசரோடவர்க்காங்கந்தியக்கடன்முடித்தன்னால்

1203 அதுபொழுதங்கண்ணைந்துமுன்னவனையாரருள்வீணைநாரதன்றான்

றுதிபலபுனைந்துசொல்லுவதுடையேன்றூயநற்பாரெலாந்தோண்மேன்

மதுமலர்மாலையென்னவேசுமந்தமன்னநின்மனத்திடைமதித்தே

யிதுபுரிவைகுயேலாழிசூழுலகதின்றுனக்கிணையிலையென்றான்

1204 இந்தநற்றலத்தினிருங்குலப்பிதிர்களியைந்துநிற்கெதிர்முகந்தரவே

வந்துநீவழங்குந்திலதருப்பணத்தைவாங்கிடின்மற்றையதலத்தை

முந்துறக்காண்டியத்தலம்பிதிர்கண்முத்தியினடைந்திடும்புரமா

மந்தநற்றலமேயரும்பெருந்தலத்தினதிகவுத்தமதலமாமால்

1205 அன்றியும்பிதிர்களனைவருமேலாமரும்பெருங்கங்கையின்கரையி

னொன்றியமகிழ்ச்சியுற்றினிதிருப்பருரைக்குமெட்டருப்பணமதனை

மன்றவப்பிதிர்கள்வளங்கையில்வழங்கின்மற்றையர்நற்கதியடைவ

ரென்றதையானிங்கியம்பவேண்டின்றேயிகல்கடிந்திலங்கியவேலோய்

1206 ஆதலாலிந்தவோதநீர்ஞாலத்தருங்குலப்பிதிர்கள்யாவருமே

காதலினினைந்துதிலதருப்பணத்தைக்கைக்கொளும்பதியைநீகருத்தின்

மேதகக்காண்டியென்றுநன்மகதிவீணைநாரதனியம்பிடலும்

பூதலமன்னன்பொருவருத்தவத்துப்புரோகிதற்கின்னன்புகல்வான்

1207 ஆரழல்வளர்க்குமந்தணீர்நுந்தமம்புயப்பாதநுண்டுகளாற்

பேர்பெறுமெமதுபெருங்குலத்தோர்கள்பெருங்கதிபெற்றனரதனா

லோரினத்துகளுக்குரியம்யாநீவிருகந்தருள்புரிகுதிரென்னா

நாரதற்பணிந்துநற்றவத்தலைவனானிலவேந்தனுக்குரைப்பான்

1208 தொடுகடலுலகிற்றுன்றிருடுருவுஞ்சுடரவன்றொல்குலத்தோன்றல்

வடுவறுசிறப்பின்மறிதிரைக்கங்கைமாநதியாகியதீர்த்தத்

தடைவினிற்சென்றேயாடுதியாயினருத்தியினாரதனுரைத்த

படிநினக்குண்டாம்பகர்குவமின்னும்படியையோரடியினாலளந்தோய்

1209 கடஞ்சொரிகரடக்கவுளுடைக்கறைக்காற்கசரததுரகமாசேனை

மடந்தையரங்கிவளர்த்திடுமறையோர்மன்னுமாணாக்கர்பாங்காகத்

தொடர்ந்துபின்செல்லத்தூமணிகனகஞ்சுடர்விடுமாளிகைக்கொண்டு

படர்ந்திடுகென்னாப்படிவன்றான்பகர்ந்தபான்மையிற்பார்த்திவன்படந்தான்

வேறு

1210 திக்குலகெலாம்பரவுதீர்த்தமதின்மேலாய்த்தேசுபெறுகின்றநலிராசமாய்வீறி

மிக்கபிராயகையினின்மெய்முனிவரோடும்வேந்தர்தொழும்வேந்தன்மகிழ்வோங்குபிதிர்கணமு

முக்கணிமலக்கடவுண்முண்டகமலர்த்தாண்முத்திபெறவேவிரதமுண்டனமதாயே

தக்கபுகழ்சேர்திலதருப்பணமுநல்லகித்தண்புனல்படிந்துரியதானமுமளித்தே

1211 மன்னியவரித்துவாரந்திகழவந்திமாளவங்காகோலமாநிலகண்டந்

தன்னிகரில்சோமேசுரஞ்சிலாதலநீள்சதுரவேதவீசங்கோமதிதீர்த்தவாரம்

பன்னகேசம்பான்மைபகர்பர்ப்பரேசம்பகருமதுகண்டேசுரம்பரவருஞ்சீர்

துன்னுமாரணியங்கோமளமருவிநாளுஞ்சூருலவுகின்றகௌமாரகாந்தாரம்

1212 கதிரொழுகுநாககானம்பீமகானங்காசறுசெழுங்கவுசிகம்புகழ்நாளிங்க

மதனமகிழ்கூரவருள்பாராவதேசம்வான்முகடுதொடவெழுசிலாசநாகஞ்சே

ரதிகநல்வராகமெய்த்துதியமர்கோகன்னமாத்தியேசுரம்வேகதரிசனம்வருஞ்சீர்

விதமருவுமங்கிசாலாவனம்விளங்குமேவுமதுவாரணியமிக்கவடகானம்

1213 மாவுலவுசரவணேசுரமருவியோங்கும்வானந்தொடுஞ்சுத்தவானந்தகானந்

தேவர்தொழுதெழுநன்மரீசிவனமோரெண்டிசைசென்றுபுகழ்கொண்டதிகழ்சங்கமேசந்

தாவிலருண்மிகுபிராசாபத்தியசுரந்தசைமைபெறுமாவேணிதிரமகிழ்கூரும்

பூவுலகெலாம்பரவுபூம்புனஞ்சேரும்பூசுரர்கணேசமூறுசீசயிலமம்மா

1214 சம்பராலயநீடருங்கதலிகானந்தருஞ்சீர்விரூபாக்கங்தகுகோடியீச

மம்புவிதொழும்வசிட்டாச்சிரமபன்பரமகபிலையீசுரமருட்காளகண்டம்

வம்புலவுகின்றமாவனநகரமேவான்வாளுற்றுவளமிக்ககாளத்திமலைசே

ரெம்பிரான்மகிழ்தங்குபம்பாதியீசமிருளோடவருண்மேவுதிரிகூடவீசம்

1215 கருதரியவண்காஞ்சிநகர்கந்தமேவுகணகண்டவிசமிகுகடலமுதகானம்

பரவுமவிமுத்தநற்பாராவதேசம்பரசுறுநிருத்தகங்கன்மாடகளரி

திருமேவுசோணாசலங்கோமுகேசந்தென்றமிழ்மணங்குலவுகின்றமுதுகுன்றங்

குருமணிகொள்கோபருப்பதம்விண்டுகிரியேகோலமதிமேலுலவுகின்றவிசுவேசம்

1216 விசதமிகுதில்லைவனமிக்கிலகுகின்றதேவதனசலம்மெழின்மேவுதிருவெண்கா

டிசைவயித்தியநாதமென்சாயையடவியேமமுறுமின்பமருளாமிரவனஞ்சேர்

வசையில்கல்லியாணமங்கலமகிழ்சிறந்தமருவுதிரிகோடீசமன்றிமாகேசந்

திசைகடொறுமிசைநிறுவுகோமுத்தியீசஞ்சித்திதருபூமீசமத்தியார்ச்சுனமே

1217 பரவரியநாகநாதங்கும்பகோணம்பட்டீசமேவுசந்திரசேகரஞ்சூழ்

திரிசிராவெல்லையிறுவாயுறுதலஞ்சேர்தீர்த்தமவையாடியுடன்மூர்த்தியடிபேணிப்

பெருகார்வமொடுதிலதருப்பணமுநன்காற்பேராதகாதலிற்பிதிர்கட்களித்தே

யருளாளனங்கயற்கண்ணியொடமர்ந்தவாலவாயின்கண்மிகுமன்புடனடைந்தான்

வேறு

1218 அடைந்ததன்பின்மிடைந்தளிசேரலர்ந்தசெந்தாமரைப்பூவினழகுபூத்த

தடங்குடைந்துபடிந்தாடித்தக்கபிதிர்கடனீந்துதழலிற்காய்ந்தே

யுடைந்தபைம்பொனணிசுமந்தவுமையாளோடெமையாளுமிமையாமுக்கட்

படர்ந்தசடைப்பரஞ்சுடர்செம்பரிபுரப்பொற்பதங்கடமைப்பணிந்துபாங்கால்

1219 ஏர்பெறுநற்றீர்த்தங்களியாவையுந்தோய்ந்தேய்ந்தபிதிர்கடன்களீந்து

பேர்பெறுமத்தலங்கடொறும்பிரியாதபிரான்றனடிபேணியன்னோர்

நேர்படலிலாமையினானிகழ்த்துமுனியுரைத்தமொழிவிநோதமென்னாத்

தார்புனைந்ததடந்தோளான்றாமரைக்கண்ணீர்ததும்பத்தானங்குற்றான்

1220 அப்பரிசங்கரசர்பிரானழுங்குதலுமரனருளினங்கைதாங்குஞ்

செப்பருந்தந்திரிவீணைத்திருமுனிவனன்பினெதிர்சேர்ந்தகாலை

யொப்பரியகடன்முகட்டிலுதயவாதபனெனவேயுலகிற்றோன்றுந்

தப்பறுமன்னவன்முனிவன்சரண்பணிந்துமகிழ்ந்துமுகஞ்சாம்பிநின்றான்

1221 நின்றிடலுநிருபன்முகமெதிர்நோக்கிவீணைமுனிநிகழ்த்துகின்றா

னுன்றனதுதந்தையுவந்துனற்கரும்புண்ணியகன்மமுஞற்றலாலே

துன்றியசெஞ்சுடர்வேலோய்சொற்றருமப்பலன்புசித்துத்தொலைத்தல்வேண்டு

மென்றதனா​லெளிவந்திங்கின்பிருத்தியெதிர்முகந்தந்திலனாலம்மா

1222 ஆதலினாலினியிரங்கேலாதபன்றன்குலத்துதித்தவரசர்கோவே

யோதலுறுகாரணமொன்றுண்டதனையுரைத்திடுவமோர்தயிந்தக்

கோதிலுயர்மதிற்கூடற்குணதிசையோசனையெல்லைகொண்டபாரி

சாதவனந்தனிலுலகந்தந்தருள்சுந்தரிதவஞ்செய்தலமொன்றுண்டால்

1223 அங்கணமர்கின்றசிவலிங்கமதொன்றரசநினதருங்குலத்துப்

பொங்குகதிரோன்பூசைபுரிந்திடுபொற்பினதாகிப்போகமுத்தி

செங்கைகுவித்தெரேனுந்தெரிசனஞ்செய்தளவிலருள்செய்வதாய்வெண்

சங்குலவும்வேகவதித்தடங்கரையின்றென்மேல்பாற்சார்ந்துவைகும்

1224 அந்தமணற்றந்தசிவலிங்கமதற்காயபுகழ்வாயுதிக்கிற்

சுந்தரமூன்றம்புதொடுதூரத்திலிரவினொளிதுதைந்திலங்குஞ்

சந்திரன்வந்தருச்சனைசெய்சந்திரலிங்கமதொன்றதன்னேரின்றி

யிந்தவொருமூவுலகுமெஞ்ஞான்றுமினிதேத்தவிருக்குமாதோ

1225 அத்தலந்தானரன்றனக்குமருந்தவர்க்குமரும்பிதிர்களாயினோர்க்குஞ்

சித்தமகிழ்தலமதனிற்சென்றடைந்துன்பிதிர்களுக்குத்திலோதகத்தைப்

புத்தமுதத்தடம்பொருந்துபுனலாடியளிக்கினெதிர்பொருந்திவாங்கி

முத்தியடைகுவரதனான்முயன்றிடுதியிமூதுண்மைமுழவுத்தோளாய்

1226 மேதகுமிந்நாள்காறுமிக்ககருமத்தொடர்ச்சிமேவலாலே

யோதிடுநின்னாற்பிதிர்களுறக்காண்டற்கரிதாகிற்றுழந்தகன்ம

மாதரவிற்பரிபாகமடைந்தமலமடைந்தவதனாலேயங்கண்

டீதறுபூந்திருமடந்தைசெல்வனீயேயிமூதுதிண்ணமாதோ

1227 மலர்தலையிவ்வுலகத்துமைந்தரினின்னிகராகுமைந்தரின்றாற்

றலைமைபெறுநின்றந்தைதன்னைநிகர்மாந்தருமோசாற்றினின்றா

னிலவிடவேநீவிருந்தாநீள்புகழினொடுதருமநிறுவுநீரா

லிலகுபருந்திருந்துசுவைத்தருந்துதசைந்திடுநெடுங்கூரிலைகொள்வேலோய்

1228 மதியுடனன்மாதவரைவழுத்திமன்வல்வினைநீங்குமதனிலும்மைத்

துதிகொடுபோற்றினர்யாருந்தொல்பவங்கடொலைக்குவர்யாஞ்சொற்றவாற்றாற்

கதிர்விடுபாற்கரபுரத்திற்கருதுதிலோதகம்பிண்டஞ்சிராத்தநல்கிச்

சதுர்மறையோரருச்சனையுந்தானதருமங்களுநீதயங்கச்செய்வாய்

1229 மலங்கிடுநின்மலர்க்கண்ணீர்மாற்றிடவந்தனமிங்ஙன்வல்லைவந்தத்

தலந்தனிலேகுதியாமுந்தகுந்தீர்த்தத்துறைகடொறுஞ்சார்துமென்னா

விலங்கையர்கோன்சிரமரிந்தவிராமனிரும்பழியொழியவிறைஞ்சுஞ்சேது

தலந்தனைநற்புண்ணியதீர்த்தம்மாடநாரதனுந்தணந்துபோனான்

1230 நினைவரியபுகழ்நிருபனிகழமுதகானமணிமகதிவீணை

முனிவனுரைசெவிமடுத்துமுழுதுணர்மூவாயிரமாமுனிவரோடுந்

தனதுபிதிர்கடன்கழித்துத்தங்குபலதானதருமங்கள்செய்வான்

புனிதமிகுந்திலங்கியபொற்புரிசைசூழ்பூவணத்திற்பொருந்துகின்றான்

வேறு

1231 பேசுமிக்கபுனலதுமூழ்குசீர்பேர்கொளெட்டுறுபமூதுயர்காதையீ

தோசைபெற்றவுலகினிலோதுவோரோதுசொற்கள்செவிகொடுதேர்குவோர்

நேசமுற்றபுதல்வர்கண்மேன்மையார்நீடுபத்திநிகழும்விவேகநேர்

தேசுசுத்தியடைவர்பினீறில்வான்சீர்மிகுத்தசிவகதிசேர்வரே

சுச்தோதிதீர்த்தயாத்திரைச்சருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் 1231

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book