31

பதினாறாவது

சுச்சோதிபிதிர்களை முத்தியடைவித்த சருக்கம்

1232 பொங்கர்தொறுமங்குறவழ்பொழிறிகழும்பூவணத்திற்பொருந்திமன்னன்

றங்குகருமங்கண்முதற்றானிழைத்ததியாவையுநீ சாற்றுகென்னா

வெங்கொடுங்காமாதிகளை யொறுத்தொழித்தசவுனகன்றான்வினவலோடுந்

துங்கமறைவடித்தெடுத்ததூயவியாதனைநினைந்துசூதன்சொல்வான்

1233 கூடியநான்மறைவாணர்குலுத்துதித்தகுருபரநீகுலவுகின்ற

கேடிலருங்கதை மேலாக்கிளத்திடுநன்புராணமிகுங்கேள்வியோய்நீ

வாடியடைகுநர்தமக்குமகிழ்ந்தளிக்கும்வள்ளலுநீயதனானிற்கு

நாடிலிணையின்றென்றுநரபதிசெய்கையைச்சுருக்கிநவில்வதானான்

1234 சதுர்மறையோர்குரவருடன்றமிழ்மதுரைதணந்தேழ்பைம்புரவிபூட்டி

யுதயமால்வரைமுகட்டினோராழித்தேர்வெய்யோனுதிக்கும்வேலை

யிதயமதினொருமையுடனியல்வீணைநாரதன்றானியம்புமாற்றா

லதிர்கழற்காலரசர்பிரானரும்பாரிசாதவனத்தடைந்துமாதோ

1235 வண்டினந்துதையுமண்டலப்பொகுட்டுமலர்தருமணியொளிபரப்புங்

குண்டநீர்படிந்துகோதில்செம்பவளக்கோலமேனிச்சிவக்கொழுந்தைக்

கண்டடிபணிந்துகருதரும்பிதிர்கள் கடன்கழித்தடைந்தவனோர்நாட்

பண்டருவேதபராயணரோடும்பரிந்துநற்றொழின்முறைபுரிந்து

1236 வந்திடுமளவின்வானவர்பெருமான்மாபெருங்கோபுரவாயின்

முந்தைநான்மறையுமுழுதொருங்குணர்ந்துமூவுலகேத்திடுநெறிசேர்

சுந்தரநீறுதுதைந்தமெய்யழகுந்தூயவற்கலையுடையழகுந்

தந்தகாலவனைக்கண்டவன்றாளிற்றடமணிமுடிபடத்தாழ்ந்தான்

1237 தாழ்ந்தெழுமன்னன்றன்னைநேர்நோக்கித்தவமுனியாசிகள்கூறி

வாழ்ந்தனைகொல்லோமன்னநீயென்னாவளம்பெறமாற்றநன்கறையப்

போழ்ந்திடுமதியம்பொதிந்தபொற்சடிலப்பூவணமேவுமாரமுதைச்

சூழ்ந்தமாதவர்கள்குழாங்கண்முன்றுதைந்துதித்திடத்தொழுதுகைகுவித்தான்

1238 தொழுதகைதலைமேற்சுமப்பமெய்பொடிப்பத்துதித்திடுகின்றசொற்றருநாத்

தழுதழுத்திடச்செந்தபனியப்பொகுட்டுத்தாமரைக்கண்கணீரருவி

பொழிதரவுள்ளமுருகிடவன்பிற்பொருந்தியானந்தவாரிதியின்

முழுகிமெய்ஞ்ஞானவிழியினாற்கண்டுமூண்டெழுகாதலின்மீண்டே

1239 பாலின்வெண்டரளந்தனைத்திரைசுருட்டிப்பந்தெறிந்தேவிளையாடுஞ்

சீலமார்வைகைத்திகழ்புனலிடத்துஞ்சேர்ந்ததெள்ளமுததீர்த்ததுஞ்

சாலநீள்வானறோய்சந்திரதடத்துஞ்சங்கரன்கோயிலினன்பாற்

கோலவாளியிரண்டிட்டதோரெல்லைகொண்டமார்க்கண்டதீர்த்தத்தும்

1240 நானமுந்தருமதானமும்புரிந்துநவிலுநல்லைந்தினங்காறு

மானபண்பாடியறுபதமுரன்றே யணிமுகைவிண்டிடவலர்த்தித்

தேனிருந்துண்டுதேக்கிடுமிதழிச்சிகழிகைதிகழ்ந்துசெஞ்சடில

வானவன்பூசைமறைமுறைநடாத்திவைகினன்வையகங்காப்போன்

1241 முறைமையினங்ஙனுறையுநாடோறுமொழியுமூவாயிரமுனிவர்க்

கறுசுவையடிசிலளித்துவான்மதியமருங்கலையொடுங்குநாட்டீர்த்தத்

துறைதொறும்படிந்துதூயமாதவர்தந்துணையடிதொழுதுயர்பிதிர்கள்

பெறுதிலோதகமும்பிண்டமுமளிப்பான்பிஞ்ஞகன்பூசையும்பேணி

1242 மாமணிவரன்றிமறிதிரைகொழிக்குமருமலர்க்குருமணிவாவி

நாமவேலரசனண்ர்ருவுணர்ந்தேநன்முநிகணத்தவர்நாகர்

தேமலரலங்கற்றிண்மனுவேந்தர்சித்தர்விஞ்சையர்கள்கின்னரர்க

ளேமுறுபிதிர்களெண்டிசாமுகத்தரியாவருமீண்டினரன்றே

1243 நாந்தகத்தடக்கைநரபதியந்தநன்புனன்மூழ்கியேயன்பாற்

சேர்ந்ததக்கிணாபிமுகத்தனாய்முன்னூற்றிகழிடம்பூண்டுநன்குசையி

னேய்ந்தமாமறையோரிசைத்திடுமாற்றாலிருந்துசங்கற்பநேர்புரிந்தாங்

காய்ந்திடுதருப்பைதன்னிலாவாகித்தருங்குலப்பிதிர்களையம்மா

1244 வழுவிலாச்சிறப்பின்மன்னியமரபின்வந்தருள்கின்றவென்றந்தை

கழிபெருங்காதற்காளையானாகிற்கலைக்கடல்கடந்தனனாகின்

மொழிவருந்தவங்கண்முயன்றனனாகின்முனியுரைதவறிலனாகிற்

பொழிதருங்காதற்பொருவிடைப்பாகன்பூசனைபுரிந்தனனாகில்

1245 அரியநற்றீர்த்தத்துறைதொறுமன்பினடைந்தியான்படிந்தனனாகிற்

றருமமுந்தவமுந்தானொருவடிவாந்தந்தைசொற்றவறிலனாகிற்

பிரிவரும்பிதிர்நன்பிதாமகன்பிதாவாம்பெருங்குலப்பிதிர்கள்யாவருமே

யிருநிலம்புகழவெட்டருப்பணங்கொண்டெதிர்முகமாகவேவேண்டும்

வேறு

1246 ஈங்கடைந்தேயாவருமேயெதிர்முகந்தந்தியானளித்தவிரும்பிண்டத்தை

வாங்கியருந்தாதொழியின்வல்லையிலாருயிர்துரப்பன்மன்றவாய்மை

நீங்கலருமனுகுலத்தினிந்திக்கப்பட்டேனாய்நேர்வனென்னா

வாங்கணைந்தோர்செவிநிறைப்பவறைந்துதிலோதகமதனையவர்கட்கீந்தான்

1247 ஈந்திடுமவ்வேலைதனிலிருநிலவேந்தன்பிதிர்களின்புற்றேவான்

றோய்ந்துயர்பொன்னுலகமுறுஞ்சுரர்வடிவங்கொண்டவன்முன்றோன்றியேனோர்

தாந்தெரியாவகையடைந்துதக்ககரபாத்திரத்திற்றந்தயாவு

மாந்தரங்கமுடன்றேவரமுதருந்துமாபோலவருந்தினாரால்

வேறு

1248 அந்தவேலையின்மன்னனரியபிதிர்கடம்மை

முந்துறவேகாண்டலுமேமுதிருங்காதன்முண்டே

நந்தம்பிதிர்கள்காணநானன்குடையேனென்னாச்

சிந்தைமகிழ்ந்தாங்கன்னோர்செப்புமாசிபெற்றான்

1249 பூணார்மைந்தர்தந்தபுதல்வர்சூழந்துபோற்ற

வீணாள்படுதலன்றிவீடுவிசயத்தோடு

நீணாளுடன்வாழ்கென்னாநேர்ந்ததவமீந்தயன்மால்

காணவரனல்லதிருங்கழற்சேவடியிற்கலந்தார்

1250 இந்தத்தலமான்மியத்தினிறும்பூததனாலிறையோ

னந்தமற்றவறஞ்சேர்ந்தரியபுகழைநாட்டி

யுந்துங்காதற்பிதிர்கட்குயருங்கதிநன்குறவே

தந்தபுரமென்பதனைத்தாவில்விளக்கந்தந்தான்

1251 வாவிதிகழ்பூவணத்துமாணிக்கம்மாமலைக்கு

மேவுசெம்பொன்கொடிக்கும்வேணவாவினீந்து

பூவலையந்தான்போற்றும்போன்னனையானல்லருளாற்

றேவவன்மனருள்சேய்சீவன்முத்தனானான்

1252 ஆனமூவாயிரநல்லரியமுனிவரந்த

மானவேற்கைமன்னன்வண்மைகண்டுமிக்க

தானந்தன்னைநல்கத்தத்தம்பிதிர்கடுய்த்து

மோனஞானவின்பமுத்திதன்னிலுற்றார்

1253 பன்னவரும்பராரைப்பாரிசாதவனத்தின்

வன்னமிகுநன்மணிப்பூண்மன்னன்றன்மைகாணூஉ

வுன்னவரியகாதலுள்ளம்பிடித்தாங்குந்தப்

பொன்னுலகத்தினும்பர்பூமழைமிகவேபொழிந்தார்

1254 பண்ர்பாவமனைத்தும்பாறல்செய்வதாகிப்

புண்ணியமாய்மேலாகிப்பொருந்தும்புட்பகானத்

தண்ணனண்ர்கோயிற்கரியநிருதிதிசையிற்

றண்ணந்துளபமாயோன்றனக்குப்பச்சிமத்தில்

1255 தாவில்புகழ்நற்றந்தைசகலவுலகும்பெறுவான்

றேவதேவனருளாற்றேவவன்மலிங்க

மோவின்மறையோர்தம்மாலொன்றையங்கேதாபித்

தாவதானதானமந்தமறையோர்க்குதவி

1256 கோடிசெம்பொனந்தக்குழகன்றனக்குங்கொடுத்தாங்

காடல்வயமாமன்னனருந்தவஞ்செய்தமர்நாட்

டேடுங்கதிகணல்குந்தீர்த்தந்தோறும்படிந்து

மாடுநல்லவீணைவல்லமுனிவந்துற்றான்

1257 உற்றமுனிவனுரைப்பானுரைசெய்யிந்தப்பதியி

னற்றமறுநன்மகிமையறிந்தனைகொல்லென்னா

மற்றையந்தத்தலத்தின்வைகன்மூன்றுவைகிப்

பொற்பினோங்குங்கயிலைப்பூதரத்திற்போந்தான்

1258 அழிவில்புகழ்மன்னன்பினானதானையோடு

மெழுதாமறைதேர்மூவாயிரமாமுனிவரேத்த

மழையினகடுகிழிக்குமதில்சூழ்மாடநீடும்

பொழில்சேர்ந்தோங்கும்பொற்பிற்போகவதியிற்போந்தான்

வேறு

1259 தாவிலத்தலத்திலெட்டருப்பணஞ்செய்து

தேவவன்மேசனைத்தெரிசனஞ்செய்வோர்

மேவுமெண்டலைவர்வான்முறைவிருப்பியே

யாவருந்தொழச்சிவபுரியினேறுவார்

1260 பரவுபஞ்சாமிர்தம்பஞ்சகவ்விய

மருவியபலோதகமஞ்சனத்தினா

லரியபூவணேசனுக்காட்டுவோர்பலன்

கரியகண்டப்பிரான்கழறல்வேண்டுமால்

1261 ஆடல்செய்பூவணத்தரனுக்கானெய்யாற்

பீடுறவோர்விளக்கேற்றும்பெற்றியோர்

தேடருங்கதியருள்சிவபுரத்தினிற்

கோடிநன்குலத்துடன்கூடிவாழ்வரால்

1262 நந்தனவனமணிமாலைநற்றுகி

லந்தனமாதியீசனுக்களித்துளோ

ருந்துசீர்க்கோடிநல்லுகமொரொன்றினுக்

கெந்தைசேர்கயிலையினினிதுவாழ்வரால்

1263 குழந்தைவெண்மதிச்சடைக்குழகனுக்குமுன்

பழிந்திடுமாலயந்தனையுண்டாக்குநர்க்

கெழுந்தவன்புடன்புதிதியற்றுமன்னதின்

வழங்கிடுமதிகநான்மடங்குபுண்ணியம்

1264 தவலருந்தினவிழாத்தங்குந்திங்களி

னிவறலினெழுச்சிநன்கியற்றுவோரியாண்

டவர்மணித்தேர்விழாவணிநடத்துவோர்

சிவபிரானுடன்சிவபுரியிற்சேர்குவார்

1265 உற்றவித்தலத்திடையுயிர்மெய்யொத்துறக்

கற்றுணர்கலைவலோர்கண்டமாத்திரை

பொற்புடன்பொருந்தினோர்புனிதமேனியாய்

நற்பெருங்கயிலையினண்ணிவாழ்வரே

1266 ஆயினோரர்வளவறையுமித்தலத்

தேயநான்மறையவர்க்கீந்தவப்பொருள்

சேயுயர்விசும்புதோய்சிகரபந்திகண்

மேயசெம்பொறிகழ்மேருவாகுமால்

1267 உறுமொர்நன்பிடியனமுதலவினோரவண்

குறைவினான்மறைதெரிகோடியந்தணர்க்

கறுசுவையடிசிலன்னியதலங்களிற்

பெறவுவந்தருள்பலப்பேறுண்டாகுமால்

வேறு

1268 சதுர்முகக்கடவுளன்னசவுனகமுனிவவிந்தப்

பதிதனிற்றிலோதகஞ்செய்பான்மையோர்பலனையாமோ

துதிதரலரிதுமாதோசொற்றிடின்மன்றவாய்மை

மதிபொதிசடிலத்தெங்கள்வானவனறிவனன்றே

1269 புகலுநல்லின்பமிக்கபுண்ணியமளிப்பதாகி

நிகழ்தலம்புகழ்வதாகிநீள்பவந்துடைப்பதாகி

யகமகிழ்தரவெம்மானுக்கானந்தகானமென்றுந்

திகழ்வுறுநாமம்பெற்றித்திருநகர்சேர்ந்திலங்கும்

1270 தகுந்திருமுனிவீர்கார்ஞ்சந்நிதிதன்னில்யானு

மிகுந்திருவுடைமைபெற்றேன்மேலையோர்தம்முன்யாவர்

புகுந்துதாம்பொருந்தின்மிக்கபுண்ணியந்தன்னாலன்னோ

ரகந்​தெளிந்தருளினீடுமறிவினாலும்பராவார்

வேறு

1271 சீருலாவுபிதிர்களுறுங்கதிசேருமாகதைசெப்புறுகிற்பவ

ரேருலாவுபொருட்பகர்கின்றவரீதுகாதினிறைத்திடுமன்னோ

ரூர்கள்யாவுமொடுக்கிவிரைந்துவிணூடுலாவிடுமுப்புரம்வெந்திட

மூரன்முன்னம்விளைத்திடுமெம்பிரான்மோனஞானநன்முத்திபொருந்துவார்

சுச்சோதிபிதிர்களைமுத்தியடைவித்தசருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் 1271

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book