41
இந்நூலாக்கத்திற்கு என்னை நெறிப்படுத்திய எனது ஆசான் அமரர் முனைவர் இரா.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும். நல்லாசிகள் வழங்கி என்னை அருள்நெறிப்படுத்திய சென்னை “குமுதம்nஜாதிடம்” ஆசிரியர் உயர்திரு.A.ஆ.ராஜகோபாலன் அவர்களுக்கும். நான் கார்ம் போதெல்லாம் என்கையில் ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களைக் கொடுத்து படிக்கச் செய்து என்னை நல்லாற்றுப்படுத்திய காரைக்குடி பேராசிரியர். தே.சொக்கலிங்கம் அவர்களுக்கும். இப்புத்தகம் சிறப்பாக வெளிவர தேவையான தகவல்களைத் தந்து உதவிய ஸ்தானிகர்கள் திரு.தெய்வசிகாமணி பட்டர். திரு.சுப்பிரமணியன் பட்டர். திரு.செண்பகப் பட்டர் அவர்களுக்கும். புகைப்படங்கள் எடுப்பதில் உதவிய என்தங்கை திருமதி.மு.கலையரசி அவர்களுக்கும். தட்டச்சு செய்வதில் உதவிய என் உடன்பிறவாச் சகோதரி சபா.கீதா (கண்காணிப்பாளர். அழகப்பா பல்கலைக்கழகம்) அவர்களுக்கும். பிழைத் திருத்தத்தில் உதவிய பேராசிரியர் முனைவர்.ளு.இராசாராம் மற்றும் பல்கலைக்கழக உதவிப்பதிவாளர் திரு.க.பழனியப்பன் அவர்களுக்கும். நூலை அச்சிட்டு வெளியிடப் பணஉதவி வழங்கிய திருப்பதி தேவஸ்தானத்திற்கும். நூலை வெளியிடத் துணைசெய்த சிவகங்கை தேவஸ்தான மேலாளர் திரு.பா.இளங்கோ மற்றும் தேவஸ்தான அலுவலர்கள் அனைவருக்கும். இந்நூலை வெளியிடப் பெரிதும் உதவி செய்த பேராசிரியர். முனைவர். ரெ.சந்திரமோகன் அவர்களுக்கும். திரு.சுப.லெட்சுமணன். திரு.தி.கண்ணன் மற்றும் பல்கலைக்கழகத் தொலைபேசி இணைப்பாளர் திரு.செ.கருணாநிதி அவர்களுக்கும். எனக்குப் பலவகையிலும் உதவியாய் இருந்த என்னுடன் பணியாற்றும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும். எனது உடன்பிறந்த தம்பி திரு.கா.சுந்தரபாண்டியன் (காவல்துறை) அவர்களுக்கும். இந்நூலை அச்சிடத்தேவையான தொகையைக் கடனாக வழங்கி உதவிய அழகப்பா பல்கலைக்கழக வளாக இந்தியன்வங்கி நிர்வாகத்தினருக்கும். இந்நூலைச் சிறப்பான முறையில் அச்சிட்டு உதவிய காரைக்குடி _ லெட்சுமி அச்சகத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலை வெளியிடுவதற்கான என் உழைப்பில் சரிபாதி எனது மனைவி நாகலெட்சுமியையும் மறுபாதி என்மகள் நித்யாவையும் சேரும்.
இவர்கள் அனைவரும் திருப்பூவணநாதர் திருவருளால் அனைத்து நலன்களையும் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.
(கி. காளைராசன்)