18

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பணத்தைக் குறிக்கும் வகையில் பல்வேறு குறியீடுகள் உள்ளன.அமெரிக்காவின் பணத்திற்கு டாலர்,இங்கிலாந்து நாட்டின் பணம் பவுண்டு,ஜப்பானுக்கு யென்,ஐரோப்பிய நாடுகளில் யூரோ எனக் குறியீடுகள் உள்ளன.அதுபோல் இந்திய ரூபாய்க்கும் குறியீடு (Indian Rupee Sign ) உள்ளது. இதன்மூலம் அமெரிக்கா,பிரிட்டன்,ஜப்பான் போன்ற நாடுகளின் நாணயங்களின் வரிசையில் ரூபாயின் குறியீடு சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இந்திய ரூபாய்:

இந்தியாவில் நாம் பயன்படுத்தும் பணத்தினை ரூபாய் என்று அழைக்கிறோம். இந்திய ரிசர்வ் வங்கியே ரூபாயை வெளியிடுகிறது.இந்தியாவில் பெரும்பாலும் ருபீ, ரூபாய்,ரூபயி போன்ற வார்த்தைகளில் அழைக்கின்றனர்.அதே சமயத்தில் மேற்கு வங்காளம்,அசாம்,ஒரிசா போன்ற மாநிலங்களில் வாழும் மக்கள் பணத்தை டாக்கா என்ற பெயரில் அழைக்கின்றனர்.உலகளவில் Rs. அல்லது gINRINR என்றே இந்திய ரூபாய் குறிப்பிடப்பட்டு வந்தது. INR என்பது இந்திய ரூபாயின் எஸ் 4217 குறியீடு.

குறியீடு:

இந்திய ரூபாய்க்கான குறியீடு ஒன்றை தேர்வு செய்வதற்காக 2009 ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று மத்திய அரசு ஒரு போட்டியை அறிவித்தது.இப்போட்டியில் 3331 நபர்கள் கலந்து கொண்டு ரூபாய்க்கான குறியீடுகளை தயாரித்து அனுப்பினர்.இதில் 5 குறியீடுகள் தேர்வு செய்யப்பட்டன.இந்த 5 குறியீடுகளில் சிறந்த குறியீடு ஒன்றை 2010 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று தேர்வு செய்தனர்.

இந்திய ரூபாயின் புதிய குறியீடு தேவநாகரி (இந்தி) எழுத்தான ( ` `RA) ““மற்றும் ரோமன் எழுத்தான RR(ஆர்) ஆகியவற்றின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் “ர” வர்க்கத்தின் குறியீட்டையும்,ஆங்கில எழுத்து “RR” ஐயும் பிரதிபலிக்குமாறு உள்ளது.மற்ற நாடுகளின் குறியீட்டில் உள்ளது போல ஒரு படுக்கை கோடு(Sleeping Line) சேர்க்கப்பட்டுள்ளது.ஆங்கிலத்தில் R என்ற எழுத்தின் பாதியில் அதன்மீது இரண்டு கோடுகள் போட்டது போன்று இருக்கிறது.இந்த புதிய குறியீட்டை வடிவமைத்தவர் மும்பை ..டி முதுகலைப் பட்டதாரி மாணவர் டி.உதயகுமார் (D.Udayakumar) ஆவார்.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வடிவங்களில் குறியீடுகள் போட்டியில் கலந்து கொண்டன.இதில் உதயகுமார் வடிவமைத்த குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டது.இதற்காக இவருக்கு 2.5 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.இந்தப் புதிய குறியீடுக்கு மத்திய அமைச்சரவை 15,ஜூலை 2010 இல் ஒப்புதல் அளித்தது.தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி அமைச்சரவையின் முடிவை வெளியிட்டார்.

இந்தப் புதிய குறியீடு இந்திய ரூபாயை இந்தியாவிலும்,வெளிநாடுகளிலும் பல்வேறு மொழிகளில் ஒரே மாதிரியாக தெரியப்படுத்துவதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான், நேபாளம்,இலங்கை,இந்தோனேசியா போன்ற பல நாடுகள் ரூபாய் அல்லது ரூபயா என்ற பெயரில் தங்கள் நாணயங்களை அழைக்கின்றனர்.இப்போது வெளிவந்துள்ள இந்திய ரூபாயின் குறியீடு இந்திய ரூபாயின் தனித்துவத்தை நிலைநாட்டுவதாக உள்ளது.

உதயகுமார்:

இந்திய ரூபாயின் குறியீட்டை வடிவமைத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.இவர் 10,அக்டோபர் 1978 ஆம் ஆண்டில் பிறந்தார்.இவர் ரிஷிவந்தியம் தொகுதியின் முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் ஆவார்.உதயகுமாரின் தாயார் பெயர் ஜெயலட்சுமி.இவரின் பெற்றோர்கள் சென்னை தண்டையார்பேட்டையில் வசித்து வருகின்றனர்.

உதயகுமார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள லாசேட்லியர் உறைவிட ஜூனியர் பள்ளியில் பிளஸ் டூ வரை படித்தார்.பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் பட்டம் பெற்றார். பி.ஆர்க் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்வு பெற்றார்.அதன் பிறகு மும்பை ..டி யில் தொழில் டிசைனிங் பிரிவில் முதுகலைப்பட்டம் பட்டம் பெற்றார்.அங்கு பி.எச்டி பட்டமும் பெற்றார்.

இந்திய ரூபாயின் அடையாளக் குறியீடு தேர்வு செய்யப்பட்டது கண்டு உதயகுமார் கூறுகையில்”என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. உண்மையில் மெய்சிலிர்த்து போய் இருக்கிறேன். என்றார்.ரூபாய்க்கான அடையாளக் குறியீட்டை இந்திய எழுத்தில் வடிவமைத்து இருந்தார்.போட்டியில் வெற்றிபெற இதுவே காரணமாக இருக்கலாம் எனவும் அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

உதயகுமார் தற்போது கவுகாத்தி ..டி யின் வடிவமைப்புத் துறையில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் இந்திய ரூபாய் என்றாலே நினைவிற்கும் வரக்கூடிய குறியீட்டை உருவாக்கியுள்ளார்.

பயன்பாடு:

ரூபாய்க்கான குறியீடு ஜூலை மாதம் 2010 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.இந்தப் புதிய குறியீடு 6 மாதத்திற்குள் இந்தியாவிலும்,24 மாதங்களுக்குள் சர்வதேச அளவிலும் புதிய குறியீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்த Rsஎன்பதற்குப் பதிலாக புதிய குறியீட்டினை உடனே பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்த சமயத்தில் ,இந்திய தபால்துறை புதிய குறியீடு கொண்ட அஞ்சல் தலையை 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 3 அன்று வெளியிட்டது.

இந்திய பட்ஜெட் உரையின்போது அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இனிவரும் 1,2,5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களில் குறியீடு இடம்பெறும் என 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று அறிவித்தார்.2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளிவந்த 10,100,500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் இந்திய ரூபாயின் குறியீடு முதன்முதலாக அச்சிடப்பட்டது.இதுதவிர புதிய குறியீட்டை அச்சில் வெளியிடவும்,கணினி பயன்பாட்டுக்கு உதவும் வகையில் கணினியின் விசைப்பலகையிலும் ,கணினி மென்பொருள்களிலும் இடம் பெறச் செய்துள்ளனர்.

இனி தமிழில் ரூ என்றோ ரூபாய் என்றோ போட வேண்டியதில்லை.அதேபோல் ஆங்கிலத்தில் Rs(ஆர் எஸ்) என்றும் போட வேண்டியதில்லை.இந்திய ரூபாயின் குறியீட்டை போட்டாலே போதும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

இந்திய தேசியச் சின்னங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book